Tuesday, September 23, 2025

Ramalingam Karthik from Tamil Nadu says, he has developed water-to-hydrogen technology

Ramalingam Karthik from Tamil Nadu says, he has developed water-to-hydrogen technology.



HONC Gas Pvt. Ltd. says the technology converts purified water into hydrogen gas through a proprietary multi-stage electrolysis and gas-blending process. The company is awaiting government approval to bring the technology to market

A private company, HONC Gas Pvt. Ltd., has claimed to have indigenously developed a technology to convert purified water directly into hydrogen gas through a proprietary multi-stage electrolysis and gas-blending process.


Bealur Ramalingam Karthik, founder of the company, told journalists that HONC Gas could be applied across heavy and large industries currently relying on fossil fuels, but all equipment must be compatible with the fuel. “While the core technology is complete, the supporting equipment and components are yet to be developed for full-scale industrial use,” he said. However, the technology needs to be scientifically validated.

According to him, his “innovation”, Gyroid Electrolyte Membrane (GEM), produces a precise mixture of hydrogen (H₂) and oxygen (O₂) for fuel generation. “When purified water is poured into the HONC gas generators, the hydrogen and the oxygen are broken down after which the combine is converted into hydrogen gas through multiple scientific processes,” he said. “The GEM technology generates fuel on demand, removing the need for compression, long-distance transport, or storage,” he added.

“HONC Gas operates entirely on purified water, producing hydrogen fuel instantly with no carbon emissions, reflecting its name: Hydrogen–Oxygen, No Carbon,” he added.

“These power generator units, which convert water into hydrogen gas, are fully indigenous and run on DC current or solar power while recycling energy. They consume minimal quantities of water. The system is cost-efficient: boiling one litre of water with LPG takes 5.36 minutes at ₹0.63, while using HONC Gas, it takes 1.32 minutes at ₹0.14,” he said.

Sunday, June 29, 2025

ரத்த வகைகளில் ஒரு புதிய மைல்கல்.. 'க்வாடா நெகட்டிவ்' உலகின் அரிதான ரத்தக் குழு கண்டுபிடிப்பு!

ரத்த வகைகளில் ஒரு புதிய மைல்கல். 'க்வாடா நெகட்டிவ்' உலகின் அரிதான ரத்தக் குழு கண்டுபிடிப்பு!

பிரான்சின் குவாதலூப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், மருத்துவ உலகில் க்வாடா நெகட்டிவ் எனப்பெயரிடப்பட்ட அரிதான ரத்தக் குழு கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ரத்த மாற்று சங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக 48வது ரத்தக் குழுவாக அங்கீகரித்துள்ளது.


'க்வாடா நெகட்டிவ்' மருத்துவ உலகில் அரிதான ரத்தக் குழு கண்டுபிடிப்பு!

பிரான்சின் குவாதலூப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், மருத்துவ உலகில் 'க்வாடா நெகட்டிவ்' (Gwada Negative) எனப் பெயரிடப்பட்ட புதிய மற்றும் அரிதான ரத்தம் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ரத்த மாற்று சங்கம் (International Society of Blood Transfusion - ISBT) இதனை அதிகாரப்பூர்வமாக 48வது ரத்தக் குழுவாக அங்கீகரித்துள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கமான அறுவை சிகிச்சைக்கான ரத்தப் பரிசோதனையின்போது, இந்த 54 வயதுப் பெண்ணின் ரத்த மாதிரியில் அசாதாரணமான பண்புகள் கண்டறியப்பட்டன. 2011-ல், அவரது ரத்தத்தில் அசாதாரண ஆன்டிபாடி (antibody) கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய தொழில்நுட்ப வசதிகள் இதற்கு மேலும் ஆய்வு செய்ய போதுமானதாக இல்லை. 2019-ல், உயர்-திறன் DNA வரிசைப்படுத்துதல் (high-throughput DNA sequencing) தொழில்நுட்பம் வந்த பிறகு, ஆய்வாளர்கள் மீண்டும் அந்த ரத்த மாதிரியை ஆய்வு செய்தனர். அப்போது, EMM ஆன்டிஜென் (antigen) இல்லாத ஒரு புதிய மரபணு மாற்றம் (genetic mutation) இருப்பது கண்டறியப்பட்டது.

EMM ஆன்டிஜென் என்பது கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களின் சிவப்பணுக்களிலும் காணப்படும் ஒரு பொதுவான ஆன்டிஜென் ஆகும். இந்த ஆன்டிஜென் இல்லாதது, ரத்த மாற்று மருத்துவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போது வரை, குவாதலூப் பெண் மட்டுமே இந்த 'க்வாடா நெகட்டிவ்' ரத்தக் குழுவைக் கொண்ட ஒரே நபர் ஆவார். இந்தப் பெண் தனது தந்தை மற்றும் தாய் இருவரிடமிருந்தும் இந்த அரிய மரபணு மாற்றத்தைப் பெற்றிருக்கிறார். இந்த ரத்தக் குழுவைக் கொண்டவருக்கு ரத்தமாற்றம் தேவைப்பட்டால், அவரிடமிருந்து சேமிக்கப்பட்ட ரத்தத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். EMM ஆன்டிஜென் உள்ள வேறு எந்த ரத்தமும் அவரது உடலில் கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினையை (immune reaction) தூண்டும். அதாவது, அவர் 'தனக்குத்தானே இணக்கமானவர்' (compatible with herself) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, ரத்த மாற்று மருத்துவம் மற்றும் மரபணு ஆராய்ச்சியில் புதிய கதவுகளைத் திறக்கிறது. அரிதான ரத்த வகைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கு இது உதவும்.

இந்த புதிய ரத்தக் குழுவுக்கு, அந்தப் பெண்ணின் பூர்வீகப் பகுதியான குவாதலூப்பைக் குறிக்கும் வகையில் "க்வாடா நெகட்டிவ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பல மொழிகளிலும் எளிதாக உச்சரிக்கக்கூடியது என்பதால் நிபுணர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

Monday, June 23, 2025

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?


மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) பயன்படுத்துகையில், ஆராய்ச்சியாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர்.

மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு AI அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.

மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) பயன்படுத்துகையில், ஆராய்ச்சியாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர்.

சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTS) ஆராய்ச்சியாளர்கள் தான் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.


Sunday, June 15, 2025

வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர்.

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஒவ்வொரு உயிரிகளின் உடலமைப்பும் மற்றும் செயல்பாடும் வித்தியாசமானவை. இந்த வித்யாசத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உயிரிகளின் மரபணுத் தொகுப்பில்தான் (Genome) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அனைத்து உயிரிகளும் இயக்குகின்றன.

பிறவியில் கண்பார்வை இழப்பது ஏன்?

AIPL1 (Aryl hydrocarbon receptor-interacting protein-like 1 protein) என்று ஒரு மரபணு உள்ளது. இது நம் 17-ஆவது குரோமோசோமில் அமைந்துள்ளது. இந்த மரபணுவில் குறைபாடு ஏற்பட்டால் கண்ணின் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவாகப் பிறப்பு முதலே கண்பார்வை இருக்காது. இந்த நோயை லெபர் கன்ஜெனிட்டல் அமுரோசிஸ் (Leber congenital amaurosis (LCA)) என அழைக்கின்றனர்.‌

இந்த நோய்க்கு மருந்து எதுவும் கிடையாது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை கண் பார்வை இல்லாமலேதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது.

நோயைக் குணப்படுத்தும் வைரஸ்

ஆராய்ச்சியாளர்கள் சென்ற மாதம் இந்த நோய்க்கு மருத்து கண்டறிந்துள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்த இவர்கள் ஒரு வைரஸை பயன்படுத்துகிறார்கள்.

இது ஒரு வகை அடினோ வைரஸ். இது ஆப்பிரிக்கக் குரங்குகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இந்த வைரஸ் குரங்குகளுக்கு முக்கடைப்பு மற்றும் காய்ச்சலை உண்டுபண்ணும் வல்லமை படைத்தது. இந்த வைரஸ் மனிதர்களுக்கும் சற்று குறைந்த வீரியத்தில் காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பை உண்டு பண்ணும்.

முதலில் இந்த வைரஸின் மரபணுவில் சில பாகங்களை வெட்டி எறிந்தனர். இதனால் இந்த வைரஸ் மனித உடலில் தன் போக்குக்கு வேகமாகப் பல்கிப் பெருக முடியாது. ஆனால் இரண்டும் வார காலம் வரை இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மனித உடலில் உயிருடன் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை அறிந்தனர்.

பின்னர் இந்த AIPL1 என்ற மரபணுவை இயக்க ரோடாப்சின் கைனேசின் இயக்கியை (human rhodopsin kinase promoter) தேர்ந்தெடுத்தனர். இதன் கட்டுப்பாட்டில் AIPL1 மரபணு இயங்கும் வகையில் அடினோ வைரசின் மரபணுவை மாற்றி அமைத்தனர்.

ஜாஸ் (Jace) என்ற மூன்று வயது ஆண் குழந்தை இருக்கிறான். இந்தக் குழந்தையின் கண்பார்வை இழப்பிற்கு AIPL1 மரபணு குறைபாடுதான் காரணம் எனக் கண்டறிந்தனர்.

பிறந்தது முதல் இந்தக் குழந்தை இருளைத் தவிர எதனையும் பார்த்ததில்லை. "ஒளி என்றால் எப்படி இருக்கும்?" என்று கூட இந்தக் குழந்தைக்கு தெரியாது.

பெற்றோர்களின் குரல் மற்றும் பிற உயிரினங்களின் குரல் மற்றும் இயற்கையாக எழும் ஒலிகளை மட்டும் இந்தக் குழந்தைக்குத் தெரியும். ஆனால் இதைச் சார்ந்த எந்த உருவங்களும் இவர்களுக்குத் தெரியாது. தடவிப் பார்த்து சிறிய பொருள்களை வேண்டுமானால் அடையாளம் காணலாம். இப்படியேதான் இந்தக் குழந்தை வாழ்க்கையை ஓட்டிவந்தான்.

இந்தக் குழந்தை லண்டனில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் (Great Ormond Street Hospital and Moorfields Eye Hospital) சேர்க்கப்பட்டான்.

இந்த மருத்துவ மனையில் இந்தக் குழந்தையின் ஒரு கண்ணில் மிகச்சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். அதன் வழியாக இந்தக் குழந்தையின் விழித்திரையில் AIPL1 மரபணுவைச் சுமந்து கொண்டிருக்கும் அடினோ வைரஸை ஊசி மூலமாக ஏற்றினார்கள். ஒரு மணி நேரத்தில் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது!

விழித்திரைக்குள் சென்ற வைரஸ் தன்னிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி AIPL1 புரதத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

இந்தப் புரதம் விழித்திரையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குச்சி வடிவ ஒளி உணர்விகளை ஒன்றிணைக்கத் தொடங்கியது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஒளி உணர்விகள் தங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியது.

இப்படியே சிகிச்சை முடிந்து ஒரு மாத காலம் நகர்ந்தது. பின்னர் படிப்படியாக சிகிச்சை பெற்ற கண்ணால் அந்தக் குழந்தை தன் வாழ்வில் முதன் முறையாக ஒளியை உணரத் தொடங்கினான்!

அடுத்து இந்த குழந்தை தான் விளையாடப் பயன்படுத்திய பொம்மைகளை அந்த அடையாளம் காணத் தொடங்கினான் !

இதனால் இந்தக் குழந்தையும் அதன் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கூடவே ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் மகிழ்ந்தனர். ஒரு வழியாகக் குழந்தையின் நல்வாழ்விற்கு ஒளி பிறந்தது.

Friday, June 13, 2025

சூரிய குடும்பத்தில் புதிய கிரகத்தை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் புதிய கிரகத்தை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்த சூழலில், சனிக்கு அடுத்து யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

சூரிய குடும்பத்தின் உள்ளே வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கின்றதா என்பது குறித்த ஆய்விலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.  

பிளானெட் நைன்

அந்த ஆய்வின் மூலமாக, தற்போது புளூட்டோவை தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் புதிய கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய கிரகத்திற்கு, Planet 9 பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த புதிய கிரகமானது 700 கி.மீ. அகலம் கொண்டது. மேலும், புளூட்டோவை விட 3 மடங்கு சிறியதாக உள்ளது இருக்கிறது என அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் தெரிவித்துள்ளார்.

தரவு தொகுப்புகள் மூலம் இந்த புதிய கிரகத்தை கண்காணித்துள்ள 23 வயதான சாம் டின் என்ற வானியலாளர், சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் இந்த கிரகமும் ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் வெப் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Wednesday, June 11, 2025

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்: ஷார்ஜா விஞ்ஞானிகள் சாதனை!

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்: ஷார்ஜா விஞ்ஞானிகள் சாதனை!

மின்சாரத்தை பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை ஷார்ஜா பல்கலை. விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார்பைன்டை ஆக்ஸைடை வெளியிடாத, தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்க முடியும்.

பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் எரிபொருட்களை விட ஹைட்ரஜன் சிறந்த, மாசு இல்லாத எரிபொருளாக கருதப்படுகிறது. காரணம் மற்ற எரிபொருட்கள் போல கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடை) வெளியிடாது. எனவே, ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிசக்திக்கான ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

மின்சாரத்தை பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை ஷார்ஜா பல்கலை. விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார்பைன்டை ஆக்ஸைடை வெளியிடாத, தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்க முடியும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ரசாயனங்கள் அல்லது உப்பு அகற்றுதல் இல்லாமல் கடல் நீரில் இருந்து நேரடியாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய பொதுவாக தூய நீர் தேவைப்படுகிறது. இது பல நாடுகளில் கிடைக்காது. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், கடல் நீரில் இருந்து 98% மின்சாரத்தைப் பயன்படுத்தி சுத்தமான ஹைட்ரஜனை உருவாக்க முடியும். இந்த முறையில் எந்த ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை, எனவே இது முற்றிலும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மாசு இல்லாதது.

கடல் நீரில் குளோரைடு அயனிகள் இழப்பிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் பல அடுக்கு மின்முனையை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் தன்வீர் உல் ஹக் கூறினார். இந்த மின்முனை சிறப்பு மைக்ரோ சூழலை உருவாக்குகிறது, இது ஹைட்ரஜன் உற்பத்தி விகிதத்தை நீண்ட நேரம் பராமரிக்க உதவுகிறது.

இந்த தொழில்நுட்பம் குறைந்தது 300 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும். பயன்படுத்தப்படும் மின் ஆற்றலில் சுமார் 98% ஹைட்ரஜனாக மாற்றப்படுகிறது. செலவு குறைந்தது மற்றும் நிலையானது. இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக கடலோரப் பகுதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கடலோரப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் ஹைட்ரஜன் பண்ணைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது விஞ்ஞானிகள் ஒரு பைலட் திட்டத்தைத் தொடங்கத் தயாராக உள்ளனர், அங்கு உண்மையில் சூரிய சக்தியில் இயங்கும் கடல் நீர் அடிப்படையிலான ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள் சுற்றுச் சூழலில் தொடங்கப்படும்.

Sunday, June 8, 2025

பூமிக்கு அடியில் இரும்பு குழம்பு. சைபீரியா பக்கமாக போகும் காந்த சக்தி. திசைமாறும் திமிங்கிலங்கள்!

பூமிக்கு அடியில் இரும்பு குழம்பு. சைபீரியா பக்கமாக போகும் காந்த சக்தி. திசைமாறும் திமிங்கிலங்கள்!


நம்ம பூமிக்கு அடியில உள்ள உருகின இரும்பு குழம்பு சுத்திட்டே இருக்குறதாலதான்.

இந்த இரும்பு குழம்பாலதான், பூமிக்கு காந்த சக்தி இருக்கு. அந்த காந்த சக்தியை வெச்சுதான் உங்க போன்ல இருக்கற காம்பஸ் வேலை செய்யுது. இந்த காந்த வடக்கு துருவம் ஒரே இடத்துல இருக்காதாம். அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இப்போ அது சைபீரியா பக்கமா போயிட்டு இருக்காம்.

சும்மா வடக்குன்னு சொல்றோம் இல்லையா, அது வேற. இந்த காந்த வடக்கு துருவம் வேற. 1831ல ஒருத்தர் கண்டுபிடிச்சதுல இருந்து இது ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல போயிருச்சாம். கனடால இருந்து ரஷ்யா வரைக்கும் போயிருக்கு. கொஞ்ச நாளா இது ரொம்ப வேகமா போயிட்டு இருக்காம். வருஷத்துக்கு 35 கிலோமீட்டர் வேகத்துல போகுதாம்!

இது ரொம்ப கஷ்டமா இருக்கா? சிம்பிளா சொல்லணும்னா, பூமிக்குள்ள இருக்கற உருகின இரும்பு குழம்பு ஒரு பெரிய சூப் மாதிரி கொதிச்சுக்கிட்டே இருக்குன்னு நினைச்சுக்கோங்க. அது கொதிக்கிறப்ப கண்ணுக்கு தெரியாத காந்த கோடுகள் பூமியை சுத்தி உருவாகுது. இந்த கோடுகள்தான் பறவை, திமிங்கலம்ல இருந்து கப்பல், ஏரோபிளேன், ஏன் உங்க ஊபர் டிரைவர் வரைக்கும் வடக்கு எதுன்னு கண்டுபிடிக்க உதவுது.

அதனால நம்ம மேப் எல்லாம் இந்த காந்த சக்திக்கு ஏத்த மாதிரி அப்டேட் பண்ணலைன்னா எல்லாம் தப்பா போயிடும். கொஞ்ச டிகிரி தப்பினாலும் ஏரோபிளேன் துபாய்க்கு பதிலா டெல்லில இறங்க நினைக்கும். கப்பல் தப்பா போர்ட்ல போய் நிக்கும். உங்க டெலிவரி பையன் கூட தப்பான வழியில போயிடலாம். அதனாலதான் சயின்டிஸ்ட்ங்க "உலக காந்த மாதிரி"ன்னு ஒன்னு ரெடி பண்ணி அடிக்கடி அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. இது உங்க போன்ல கூகுள் மேப் அப்டேட் பண்ற மாதிரிதான். ஆனா இது பூமி முழுக்க உள்ளது. அதனாலதான் இது கொஞ்சம் கஷ்டமான வேலை. நிறைய காசு, டைம், டேட்டா எல்லாம் தேவைப்படும்.

தலைகீழா மாறிய காந்த சக்தி

போன வருஷம் டிசம்பர்ல ஒரு புது அப்டேட் விட்டாங்க. அது 2029 வரைக்கும் வேலை செய்யும். இப்போ வந்த அப்டேட் ரொம்ப துல்லியமா இருக்குமாம். ஏரோபிளேன், ராணுவம், கப்பல் துறையில இது ரொம்ப முக்கியம். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா கம்பெனிக்காரங்களும் இதை அவங்க சிஸ்டம்ல மாத்தணும்.

ஆனா இதுல ஒரு விசித்திரமான விஷயம் இருக்கு. முன்னாடி பூமியோட காந்த சக்தி தலைகீழா மாறி இருக்காம். வடக்கு தெற்காகவும், தெற்கு வடக்காகவும் மாறி இருக்கு. கடைசியா அப்படி நடந்தது 7 லட்சத்து 80 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியாம். அப்போ பூமி நல்லாதான் இருந்துச்சு. ஆனா அப்போ மனுஷங்க இல்ல. இருந்திருந்தா செயற்கைக்கோள், போன் நெட்வொர்க், கடல்ல இருக்கற திமிங்கலங்கள் மாதிரி உயிரினங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிருக்கும்.

இப்போ உடனே அப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனா நகர்வு நடந்துகிட்டே இருக்கு. AI வெச்சு சரியா பண்றதுக்கும், தானா சரியாக்கும் காந்தமானி எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இப்போதைக்கு இருக்கற நல்ல வழி இந்த உலக காந்த மாதிரியை அடிக்கடி அப்டேட் பண்றதுதான். இதத்தான் உலகத்துல இருக்கற ஜிபிஎஸ், டெக் கம்பெனிக்காரங்க எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. ஏன்னா எவ்வளவு நாள் வெயிட் பண்றோமோ அவ்வளவு திசை காட்டும் பிழை அதிகமாகும்.

அடுத்த தடவை உங்க டாக்ஸி டிரைவர் உங்களை கரெக்டா எங்கயாவது கொண்டு சேர்த்தாலோ இல்ல ஏரோபிளேன் மேகமூட்டத்துல கரெக்டா இறங்கினாலோ, அது வெறும் டெக்னாலஜி மட்டும் இல்ல. பூமிக்கு அடியில இருக்கற உருகின இரும்பு மேஜிக் பண்ணுதுன்னு நினைச்சுக்கோங்க.

காதலும் கடவுளும் மட்டும்தான் கண்ணுக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க. கண்ணுக்கு தெரியலைன்னாலும் காந்த சக்தியும் கடவுள்தான் போலல்ல. இல்லைன்னா நாமல்லாம் எவ்ளோ தடுமாறிப் போய்டுவோம். 

Ramalingam Karthik from Tamil Nadu says, he has developed water-to-hydrogen technology

Ramalingam Karthik from Tamil Nadu says, he has developed water-to-hydrogen technology. HONC Gas Pvt. Ltd. says the technology converts pur...